சிறையில் கொல்லப்பட்ட கைதி முத்துமனோ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
1 July 2021, 7:45 pm
Quick Share

நெல்லை பாளையங்கோட்டை சிறையில் நிகழ்ந்த மோதலில் உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருநெல்வேலி மாவட்டம்‌, நாங்குநேரி வட்டம்‌, பூலம்‌ குறுவட்டம்‌, பூலம்‌ பகுதி 2 கிராமம்‌, கருணாநிதி தெரு, வாகைகுளம்‌ என்ற முகவரியில்‌ வசிக்கும்‌ திரு.பாவநாசம்‌ என்பவரின்‌ மகன்‌ முத்துமனோ (வயது 27) என்பவர்‌ 22-4-2021 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில்‌ இறந்துள்ளார்‌. இந்நிகழ்வு தொடர்பாக பெருமாள்புரம்‌ காவல்‌ நிலையத்தில்‌ வழக்கு பதிவு செய்யப்பட்டு,
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தில்‌ உயிரிழந்த திரு. முத்துமனோ அவர்களின்‌ குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌, உயிரிழந்த திரு. முத்துமனோ அவர்களின்‌ குடும்பத்தினரின்‌ குடும்ப சூழ்நிலையைக்‌ கருத்தில்‌ கொண்டு, அவரது குடும்பத்திற்கு பத்து இலட்சம்‌ ரூபாய்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்திற்கு காரணமான பாளையங்கோட்டை சிறைச்சாலைப்‌ பணியாளர்கள்‌ 6 பேர்‌ பணியிடை நீக்கம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌. தற்பொழுது வழக்கானது குற்றப்‌ புலனாய்வுப்‌ பிரிவிற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவின்‌ அடிப்படையில்‌ தக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 369

0

0