கொரோனாவால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களா..? தமிழக அரசின் கண்காணிப்பு கிட் ரெடி..!

8 September 2020, 6:53 pm
amma corona home care kit 1 - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தொற்றின் லேசான அறிகுறி மட்டும் இருப்பவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால், அவர்கள் தங்களை தாங்களே கண்காணித்துக் கொள்ளும் மருத்துவ பெட்டகத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில், நோய் தொற்றின் தாக்கம் குறைவாக இருப்பவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

அதன்படி, வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்கள், தங்களை தாங்களே கண்காணித்துக் கொள்ளும் விதமான, மருத்துவ கண்காணிப்பு பெட்டகத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மருத்துவ பெட்டகத்தில் முகக்கவசம், பல்சி ஆக்ஷி மீட்டர், தெர்மா மீட்டர், கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள் இடம்பெற்றுள்ளன. இதன்விலை ரூ.2,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெட்டகத்தில் உள்ளவற்றை எப்படி, எப்போது எல்லாம் பயன்படுத்துவது என்பது குறித்து, தனிமைப்படுத்தி இருக்கும் காலமான 14 நாட்களில் 5 முறை ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், இந்தப் பெட்டகத்தை வாங்க விரும்புவர்கள் 73388 – 35555 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் டோர் டெலிவரியே செய்வார்கள்.

Views: - 6

0

0