சென்னை : எதிர்கட்சிகளின் தொடர் அழுத்தத்தின் காரணமாக, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கு குழு அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசின் இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்தத் தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தை இழந்த காவலர் உள்பட பல ஆண்களும், பெண்களும் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகிறது. எனவே, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதன் ஒரு பகுதியாக, பாமக சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் இயற்றுவது குறித்து ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. முந்தைய ஆட்சியாளர்களால் கடந்த 25-2-2021 அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கடந்த 3-8-2021 அன்று வழங்கிய தீர்ப்பில், இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதனை ரத்து செய்தது. மேலும், இச்சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல் பூர்வமான தரவுகளை விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை எதிர்த்து மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 13-11-2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,
இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஒய்வு பெற்ற மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கே. சந்துரு அவர்கள் தலைமையில், ஐலடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் திரு. சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான
டாக்டர் திருமதி லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு. வினித் தேவ் வான்கடே, ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மேற்குறிப்பிட்ட குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன் மூலம் இச்சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டிடும் வகையில் முன் மாதிரிச் சட்டமாக அமையும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.