வார இறுதிநாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி… கடைகள் செயல்படும் நேரமும் நீட்டிப்பு : தமிழக அரசு அறிவிப்பு

Author: Babu Lakshmanan
14 October 2021, 4:17 pm
Quick Share

சென்னை : வார இறுதிநாட்களில் வழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தமிழக அரசு நீக்கியது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது நாளொன்றுக்கு சராசரி பாதிப்பு 1,300க்கும் கீழாக குறைந்து விட்டது. இந்த சூழலில், தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கிறது.

இதனிடையே, நாளை வெள்ளிக்கிழமை விஜயதசமி மற்றும் நவராத்திரி திருநாள் கொண்டாடப்பட உள்ளதால், வார இறுதிநாட்களில் கோவில்களை திறக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான வழக்கிலும் நீதிமன்றமும் இது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் அமலில் இருக்கும் கொரோனா ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

பின்வருமாறு,

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி

அங்கன்வாடிகள் செயல்பட அனுமதி

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்லவும் தமிழக அரசு அனுமதி

நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்க அனுமதி

தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கு அனுமதி

அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் நடத்த தடை தொடரும்

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி

இறுதிச்சடங்கு தொடர்பான நிகழ்வுகளில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதி

இன்று முதல் அனைத்து விதமான கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 162

0

0

Leave a Reply