முதலமைச்சர் முன்னிலையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து : 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெறலாம்

20 July 2021, 12:47 pm
Cm stalin - updatenews360
Quick Share

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய ரூ. 17,297 கோடி மதிப்பிலான 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பிரபல தனியார் நிறுவனங்களுடன் தமிழக அரசு தொழில் ரீதியான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய ரூ. 17,297 கோடி மதிப்பிலான 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெத்திடப்பட்டன. குறிப்பாக, கேப்பிட்டல் லாண்ட், அதானி, ஜேஎஸ் டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

மேலும், தொழில் நிறுவனங்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஒற்றை சாளர இணையதளம் 2.0வையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, 14 புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

Views: - 111

0

0

Leave a Reply