ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது : தமிழக அரசு திட்டவட்டம்..!!

16 November 2020, 3:22 pm
Quick Share

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் கூறி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி பொதுமக்கள் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் போராட்டத்தின் காரணமாக, வரும் 2018ம் ஆண்டு மே 28ம் தேதி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஆலையை மீண்டும் திறக்க அனுமதியளித்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆலையை மீண்டும் திறக்க இடைக்கால தடை விதித்தது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அனுமதியில்லை என்றும், வேண்டுமென்றால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அனுகலாம் என தெரிவித்தது.

அதன்படி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளிக்க மறுத்தது. எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Views: - 23

0

0

1 thought on “ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது : தமிழக அரசு திட்டவட்டம்..!!

Comments are closed.