ஆக.,10ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க தமிழக அரசு அனுமதி!

5 August 2020, 4:32 pm
gym 1- updatenews360
Quick Share

சென்னை : தனியார் உடற்பயிற்சி கூடங்களை வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமிஅவர்களிடம்‌, தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள்‌ மற்றும்‌ பயிற்சியாளர்கள்‌ நல சங்கத்தின்‌ சார்பில்‌ அதன்‌ நிர்வாகிகள்‌, தமிழ்நாட்டில்‌ உள்ள உடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும்‌ என கோரிக்கை வைத்தனர்‌.

அக்கோரிக்கையினை கனிவுடன்‌ பரிசீலித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி அவர்கள்‌ பின்வருமாறு ஆணை பிறப்பித்துள்ளார்கள்‌. மத்திய அரசு தனியார்‌ உடற்பயிற்சிக்‌ கூடங்களை திறக்க ஆகஸ்ட்‌ 5ந்தேதி முதல்‌ அனுமதி அளித்துள்ள நிலையில்‌, தமிழ்நாட்டிலுள்ள தனியார்‌ உடற்பயிற்சிக்‌ கூடங்கள்‌, 50 வயது மற்றும்‌ அதற்குக்‌ குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன்‌ வரும் 10ம் தேதி முதல்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும்‌, இதற்கான நிலையான வழிகாட்டு செயல்‌ முறைகள்‌ தனியாக வெளியிடப்படும்‌. அவற்றை கட்டாயம்‌ கடைபிடிக்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.