தமிழக ஆளுநர் இன்று டெல்லி பயணம் : குடியரசு தலைவர் உள்பட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார்

Author: Babu Lakshmanan
23 September 2021, 8:31 am
rn ravi - updatenews360
Quick Share

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று டெல்லி செல்கிறார்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி, கடந்த 11ம் தேதி பதவியேற்றார். இந்தநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். ஆளுநராக பதவியேற்ற பின் முதல் முறையாக டெல்லி செல்லும் அவர், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 118

0

0