டிச.,1 முதல் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு : எந்தெந்த ஏரியாவுக்கு தெரியுமா..?

30 November 2020, 2:10 pm
Cbe Rain - Updatenews360
Quick Share

வரும் டிச.,1ம் தேதி முதல் 4ம் தேதி வரை தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் நிவர் புயல் சத்தமில்லாமல் கரையை கடந்திருந்தாலும், பெய்த கனமழையினால் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தில் தத்தளித்தன. அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சூழலில், மீண்டும் வங்கக்கடலில் புதிய புயல் உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை மக்களை பீதியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுபெற்று விட்டதாகவும், இது புயலாக மாறி, வரும் 2-ம் தேதி இலங்கையில் கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவயரசன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், “வங்கக்கடலில் நாளை புயல் கரையைக் கடக்கும். அந்த சமயம் நாளை முதல் டெல்டா மாவட்டங்களிலும், 2,3ம் தேதிகளில் தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென்மாவட்டங்களில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும். 3ம் தேதி தென்காசி, கன்னியாகுமரியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

வங்கக்கடலில் உருவாகும் இந்தப் புயல் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும். இந்தப் புயல் 2 நாட்கள் வரை குமரிக்கடலில் நீடிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று தெரிவித்தார்.

Views: - 0

0

0