தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

12 August 2020, 4:48 pm
tn secretariat- updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-

காத்திருப்போர் பட்டியலில் இருந்த முன்னாள் தூத்துக்குடி எஸ்.பி அருண்பாலகோபாலன், சென்னை சைபர் பிரிவு எஸ்பி-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சைபர் பிரிவு எஸ்பி-2 ஆக பணியாற்றி வந்த ஓம் பிரகாஷ் மீனா சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜி சிபிசக்ரவத்தி சி.பி.சி.ஐ.டி. சைபர் செல் எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சி.பி.சி.ஐ.டி. சைபர் செல் எஸ்.பி ஜெயலட்சுமி தமிழக போலீஸ் அகாடமியின் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக போலீஸ் அகாடமியின் எஸ்பியாக பணியாற்றி வந்த ஜெயச்சந்திரன் தமிழக கமாண்டோ படைப்பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக கமாண்டோ படைப்பிரிவு எஸ்.பி. சி.ஷியாமலா தேவி, சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு பிரிவு எஸ்.பி.யாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு பிரிவு எஸ்.பி.யாக இருந்த கண்ணம்மாள், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்-2 ஆக பணிபுரிந்து வந்த தீபா சத்யன், அம்பத்தூர் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அம்பத்தூர் துணை ஆணையர் நிஷா, சென்னை சைபர் பிரிவு எஸ்.பி.-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 12

0

0