தமிழகம் – கேரள நதிநீர் பிரச்சனை : இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை!!
11 September 2020, 10:39 amதமிழகம் – கேரளா இடையிலான நதிநீர் பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய இரு மாநில அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
தமிழகம் – கேரளா இடையிலான பரம்பிக்குளம் – ஆழியாறு புதுப்பிக்க வேண்டும், ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருமாநில விவசாயிகளிடையே இருந்து வருகிறது. நதிநீர் பங்கீடு பிரச்சனை குறித்து விவாதிக்க கடந்த ஆண்டு செப்.. இரு மாநில முதலமைச்சர்களும் சந்தித்து பேசினர். இதன் பலனாக கடந்த டிச., மாதம் இரு மாநிலங்களுக்கு இடையே முதல் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட பிரச்சினை மற்றும் பாண்டியாறு-புன்னம்புழா திட்ட விவகாரம் என இரு குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2வது கூட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில், கொரோனாவால் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கி போய் விட்டது.
தற்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் மற்ற விவகாரங்களையும் மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் எடுத்து முழுவீச்சில் செய்து வருகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இருமாநில அதிகாரிகளும் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
0
0