பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ.5,000 கோடி…. காவல்துறைக்கு ரூ.9,567.93 கோடி… இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்!!!

23 February 2021, 12:02 pm
ops announcemnet - updatenews360
Quick Share

11வது முறையாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக, எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகனுக்கு பேச வாய்ப்பு கேட்டு எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :-

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ. 4 லட்சம் காப்பீட்டுத் தொகை

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் இயற்கையாக உயிரிழந்தால் ரூ. 2 லட்சம் காப்பீட்டுத் தொகை

காவல்துறையை நவீனமயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு – காவல்துறைக்கு வரும் நிதி ஆண்டிற்கு ரூ.9,567.93 கோடி ஒதுக்கீடு

தீயணைப்புத்துறைக்கு ரூ.436.68 கோடி ஒதுக்கீடு

நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1,437.82 கோடி ஒதுக்கீடு

பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,738.81 கோடி ஒதுக்கீடு

அடுத்த சில ஆண்டுகளில் 2,000 மின்சாரப் பேருந்துகள் உள்பட, 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையில் ரூ.13,352 கோடி செலவு

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும்

மீன்வளத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.580.97 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் நிதியாக ரூ.3,548 கோடி ஒதுக்கீடு

இடைக்கால பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.22,218 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் (நகர்புறம்) ரூ.3,700 கோடி ஒதுக்கீடு

ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்டத்தை அமைக்க விரிவான சாத்தியக் கூறு அறிக்கை – ஆய்வு

இடைக்கால பட்ஜெட்டில் அம்மா கிளினிக்குகளுக்காக ரூ. 144 கோடி ஒதுக்கீடு

2019 உலக முதலீட்டாளர் மாநாட்டில் இருந்து இன்று வரை கையெழுத்திடப்பட்டவற்றில் 89% திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன

81 திட்டங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. 191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பட்டில் உள்ளன.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தை வலுப்படுத்த கூடுதல் முலதனமாக ரூ.1,000 கோடியை அரசு வழங்கும் – ரூ.300 கோடி ஒதுக்கீடு

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டப் பணிகள் 2022 மார்ச் மாதம் முடிக்கப்படும் – இந்தத் திட்டத்திற்கு ரூ.6,941 கோடிக்கு கொள்ளை அளவில் ஒப்புதல்

2020-21 ஆம் ஆண்டில் ரூ.3,016.26 கோடி செலவில் 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்

இடைக்கால பட்ஜெட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.18,750 கோடி ஒதுக்கீடு

மதிய சத்துணவுத் திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிடர் சிறப்புக் கூறுகள் திட்டத்திற்காக ரூ.13,967.58 கோடி ஒதுக்கீடு

பழங்குடியினர் துணை திட்டத்திற்காக ரூ.1,276.24 கோடி ஒதுக்கீடு

புதிய பேருந்துகள் வாங்க போக்குவரத்து துறைக்கு ரூ.623 கோடி ஒதுக்கீடு

உதய் திட்டத்தின் கீழ் கடன்களை மானியமாக மாற்றுவதற்கான இறுதிக்கட்ட மானியமாக ரூ.4,563 கோடி ஒதுக்கீடு

உதய் திட்டத்தின் வழிமுறைகளின்படி இழப்புகளை ஈடுசெய்யும் விதமாக ரூ.7,217.40 கோடி ஒதுக்கீடு

மின்கட்டண மானியங்களுக்காக ரூ.8,834.68 கோடி ஒதுக்கீடு

Views: - 0

0

0

Leave a Reply