ஆளுநருடன் மூத்த அமைச்சர்கள் சந்திப்பு : அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு குறித்து முக்கிய ஆலோசனை

20 October 2020, 12:51 pm
TN Governor- Updatenews360
Quick Share

சென்னை : நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக மூத்த அமைச்சர்கள், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்க வகையில் செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த மசோதா தமிழக சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பு வைக்கப்பட்டது.

நடப்பாண்டு முதலே இந்த உள்இட ஒதுக்கீடு மசோதா அமலுக்கு வருமா என்பது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது, சட்டமசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாகவும், உள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு வரும் வரையில் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்போவதில்லை,” எனக் கூறியுள்ளது.

இதனிடையே, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு எதிர்கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, ஆளுநர் மாளிகையில் வைத்து அமைச்சர்கள் செங்கோட்டையன், கேபி அன்பழகன், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சிவி சண்முகம் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Views: - 15

0

0