தொழில் தொடங்குபவர்களுக்கு 24 % வரை மானியம் : புதிய தொழில் கொள்கையை வெளியிட்டது தமிழக அரசு..!

7 September 2020, 12:02 pm
tn secretariat- updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கினால் 24% வரையில் மானியம் வழங்கும் வகையிலான புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

கொரோனா ஊரடங்கு சமயத்திலும் இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈட்டிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் 41 நிறுவனங்களோடு, ரூ.30,664 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. இருப்பினும், மேலும் முதலீடுகளை கவர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சர்வதேச முதலீடுகளை பெற சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, பல்வேறு அம்சங்கள் அடங்கிய புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு 15% முதல் 18 % வரை மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருச்சி, திருப்பத்தூர், கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 20 % முதல் 24% மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0