நிதியமைச்சராக பிடிஆர் தியாகராஜன்… உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி : பதவியேற்றது தமிழகத்தின் புதிய அமைச்சரவை..!!!

7 May 2021, 10:25 am
dmk minister cabinet - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆளுநர் விடுத்த அழைப்பின் பேரில் முக ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.

இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைத்தார். அப்போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் எனக் கூறி, அவர் பதவியேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். துறை வாரியாக அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு :-

ஸ்டாலின் – பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, உள்துறை

துரைமுருகன் – நீர்பாசனத்துறை

அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளம்

ஐ பெரியசாமி – கூட்டுறவுத்துறை

கேஎன் நேரு – நகர்ப்புற வளர்ச்சித்துறை

அர. சக்கரபாணி – உணவுத்துறை

பொன்முடி – உயர்கல்வித்துறை

செந்தில்பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு

எவ வேலு – பொதுப்பணித்துறை

மா.சுப்ரமணியன் – சுகாதாரத்துறை

பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவளம்

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் – வருவாய்

பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை

எம்ஆர்கே பன்னீர்செல்வம் – வேளாண்மை

அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக்கல்வித்துறை

குன்னூர் ராமச்சந்திரன் – வனத்துறை

மெய்யநாதன் – சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு

முத்துச்சாமி – வீட்டுவசதி

முபெ சாமிநாதன் – செய்தித்துறை

கீதா ஜீவன் – சமூக நலன்

சேகர் பாபு – இந்து சமயநிலைய அறத்துறை

தங்கம் தென்னரசு – தொழில்துறை

எஸ். ரகுபதி – சட்டம் மற்றும் சிறைத்துறை

மதிவேந்தன் – சுற்றுலாத்துறை

கயல்விழி – ஆதிதிராவிடர் நலத்துறை

மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பம்

எஸ்எம் நாசர் – பால்வளத்துறை

ராஜகண்ணப்பன் – போக்குவரத்து

திட்டக்குடி கணேசன் – தொழிலாளர் நலன்

மதுரை மூர்த்தி – வணிக வரி, பத்திரப்பதிவு

த.மோ. அன்பரசன் – ஊரக தொழில்துறை

ஆர். காந்தி – கைத்தறி

சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

செஞ்சி மஸ்தான் – சிறுபான்மையினர் நலன்

Views: - 180

0

0