நாளையுடன் ஓய்வுபெறும் திரிபாதி… சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் : தமிழக அரசு உத்தரவு

Author: Babu Lakshmanan
29 June 2021, 8:02 pm
sylendra babu - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் திரிபாதி நாளையுடன் ஓய்வு பெற இருக்கிறார். இதனால், ரயில்வே காவல்துறை டிஜிபியாக பணியாற்றி வரும் சைலேந்திரபாபுவை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவர் நாளை பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி, பொதுமக்களால் அதிகம் தெரிந்த நபராக இருக்கும் சைலேந்திர பாபு, வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 218

0

0