எதிர்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு… அதிமுக கொறடாவாக எஸ்பி வேலுமணி நியமனம்…!!

14 June 2021, 4:32 pm
ops - sp velumani - updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 65 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக, தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்கட்சியாக இருந்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும், பல்வேறு மதலைவர்கள் போட்டியிட்டதால், அதிமுகவின் சட்டப்பேரவை துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவிகள் நிரப்பப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், அதிமுகவின் கொறடா மற்றும் துணைத் தலைவர் பதவிகளை நிரப்புவதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற்றது.

அதன்படி, கட்சியின் துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். கொறடாவாக எஸ்பி வேலுமணியும், துணை கொறடாவாக அரக்கோணம் எம்எல்ஏ க.ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பொருளாளராக கடம்பூர் சி. ராஜு, செயலாளராக கேபி அன்பழகனும், துணைச் செயலாளராக பி.எச். மனோஜ் பாண்டியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 234

0

0