தள்ளிப்போகிறதா 12ம் வகுப்பு பொதுத்தேர்வு..? பள்ளிக்கல்வித்துறை செயலாளர் முக்கிய ஆலோசனை

8 April 2021, 4:32 pm
Plus-Two-exam - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதால், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு முறைகளையும் வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, திட்டமிட்டபடி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா..? என்ற சந்தேகம் எழுந்தது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது பள்ளிக் கல்வித்துறைக்கும் சவாலானதாக இருக்கும் என்றே தெரிகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக கல்வித்துறை அதிகாரிகள் அவரச ஆலோசனை நடத்தினர். திட்டமிட்டபடி நடத்தலாமா…? அல்லது தள்ளி வைக்கலாமா..? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார், இயக்குநர்கள் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். விரைவில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

மே 3ம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0

Leave a Reply