தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.க்கு ரூ.1,500 கட்டணம் நிர்ணயம் : தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

14 May 2021, 1:58 pm
Quick Share

தமிழகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. நாளொன்று தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மேலும், நோயாளிகளை கூட்டி வருவதற்கான ஆம்புலன்ஸ்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் தனியார் ஆம்புலன்களில் நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- 10 கிலோ மீட்டருக்கு ரூ.1,500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜன் வசதி போன்ற அடிப்படை மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸுக்கு 10 கி.மீ. ரூ. 2,000 கட்டணமும், வெண்டிலேட்டர் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸுக்கு ரூ.4000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 131

0

0