தமிழகத்தில் பள்ளிகள் அடுத்த வாரம் பள்ளிகள் திறப்பு? : தேதியை முடிவு செய்தது பள்ளிக்கல்வித்துறை : தளர்வுகளை அறிவிக்கும் தமிழக அரசு..!
Author: Babu Lakshmanan27 ஜனவரி 2022, 1:44 மணி
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள வேளையிலும், பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தற்போது ஓரளவுக்கு குறைந்திருந்தாலும், நாளொன்று சராசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியே பதிவாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசும் வார இறுதி ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்குகளை அமல்படுத்தியுள்ளது. மேலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி கிடையாது. இந்தக் கட்டுப்பாடுகள் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது
இந்த நிலையில், கொரானா ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது குறித்தும், பள்ளிகளை திறப்பது குறித்தும் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதனிடையே, 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் திட்டமிட்டபடி பிப்., 1ம் தேதியில் இருந்து 1 முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடைபெறும் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
0
0