கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீட்டில் திடீர் ரெய்டு : 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோனை
Author: Babu Lakshmanan22 October 2021, 11:44 am
சேலத்தில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு உள்பட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சேலம் – புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவருக்கு தொடர்புடைய 27 இடங்களில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவனின் சகோதரி இந்திராணியின் மகன் வீட்டில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
0
0