தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் நியமனம் : ஆணை பிறப்பித்த தமிழக அரசு

14 June 2021, 11:45 am
aks vijayan- updatenews360
Quick Share

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் திமுக அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியமைத்தது. முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடியை வரும் 17ம் தேதி நேரில் சந்திக்க உள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயனை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, அவர் ஓராண்டு காலம் இந்தப் பொறுப்பில் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

Views: - 203

0

1