நேற்றைய தினத்தை விட சென்னை, கோவையில் இன்று பாதிப்பு அதிகம் : தமிழகத்தில் 8,098 பேருக்கு சிகிச்சை….

Author: Babu Lakshmanan
3 December 2021, 7:51 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் குறைந்துள்ளது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 711 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,29,061ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, இன்று சென்னையில் 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 127 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,513 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 759 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 84 ஆயிரத்து 450ஆக அதிகரித்துள்ளது.

Views: - 170

0

0