27 ஆயிரத்தை நெருங்கியது தமிழக கொரோனா : இன்று மட்டும் 35 பேர் உயிரிழப்பு… ஆயிரத்தை கடந்தது குமரி பாதிப்பு!!
Author: Babu Lakshmanan19 January 2022, 8:29 pm
சென்னை: தமிழகத்தில் மேலும் 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 26,981பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 14 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது. இன்று 35 பேர் உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 073 ஆக அதிகரித்துள்ளது. இன்று 17,456 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 06 ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளது. இதில். அதிகபட்சமாக சென்னையில் 8,007 பேருக்கும், இதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,082 பேருக்கும், மூன்றாவது இடத்தில் செங்கல்பட்டில் 2,194 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 1,008 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
0
0