தலைவரே! பொறுத்தது போதும்…: ரஜினியிடம் வலியுறுத்திய தமிழருவி மணியன்…!!

Author: Aarthi
2 December 2020, 12:41 pm
rajini vs tamilaruvi - updatenews360
Quick Share

சென்னை: போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து பேசி வருகிறார் தமிழருவி மணியன்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். பின்னர், தனது அரசியல் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றார். இதனால், ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், ரஜினிகாந்த் எடுக்கப்போகும் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில், தமிழருவி மணியன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.

Views: - 61

0

0