தமிழகம் முழுவதும் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.உயர்த்தப்பட்ட மின் கட்டணம் என்பது ஜுலை 1 முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வந்துள்ளது என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
முதல் 400 யூனிட் வரை – ஒரு யூனிட்டிற்கு 4.60 ரூபாயில் இருந்து 4.80 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது.
401 முதல் 500 யூனிட் வரை – ஒரு யூனிட்டிற்கு 6.15 ரூபாயில் இருந்து 6.45 ரூபாயாக உயர்வு
501 முதல் 600 யூனிட் வரை – ஒரு யூனிட்டிற்கு 8.15 ரூபாயில் இருந்து 8.55 ரூபாயாகவும்
601 முதல் 800 யூனிட் வரை – ஒரு யூனிட்டிற்கு 9.20 ரூபாயில் இருந்து 9.65 ரூபாயாகவும்
உயர்வு.801 முதல் 1000 யூனிட் வரை – ஒரு யூனிட்டிற்கு 10.20 ரூபாயில் இருந்து 10.70 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் 1000 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தும் நபர்களுக்கு இனி 11.80 ரூபாயாக கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது
இந்த உயர்வின் படி வீட்டு பயன்பாட்டுக்கான 400 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 20 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இதுவரை 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோரிடம் யூனிட் ஒன்றுக்கு ரூ.4.60 வசூலிக்கப்பட்டு வந்தது. இனி யூனிட் ஒன்றுக்கு 20 காசுகள் கூடுதலாக சேர்த்து 4.80 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கான மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு கிலோ வாட் மின்சாரம் ரூ.307 ஆக இருந்த நிலையில் இனி ரூ.322 வசூலிக்கப்படும்.
112 கிலோவாட்டுக்கு மேல் ரூ.562 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.589 வசூல் செய்யப்பட உள்ளது.
இதன்மூலம் 112 கிலோவாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.27 வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குடிசை இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மின் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியான உடனேயே அதற்கு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
40 மக்களவை தொகுதிகள் வெற்றி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றியை கொடுத்த மக்களுக்கு மின் கட்டண உயர்வை திமுக அரசு பரிசாக வழங்கியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளது.கட்டண உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
இதைக் குறித்து விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த விடியா அரசுக்கு,.சொன்னதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன் என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம். மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது.
மின்சாரத்தை தடையின்றி வழங்கும் திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.