தமிழகத்தில் மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா…! தாமாக முன்வந்து பரிசோதித்த போது உறுதியானது

7 August 2020, 3:00 pm
Quick Share

தஞ்சை: தஞ்சை தொகுதி திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்துவிட்டது. தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பாதிப்பு குறையவில்லை.

சாதாரண மக்களை மட்டுமல்லாது, கொரோனா வைரஸால் ஆளுநர் உட்பட பலர் பாதிக்கப்படும் நிலை உருவாகி விட்டது. அமைச்சர்கள்,  எம்எல்ஏக்கள் உள்ளிட்டவர்களுக்கும் கொரோனா உறுதியாகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் கொரோனா பரிசோதனைக்கு தம்மை உட்படுத்திக் கொண்டார்.

அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே பேராவூரணி தொகுதி எம்எல்ஏ மா. கோவிந்தராசு, ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்  ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.