ஆஸி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : ஐபிஎல்லில் ஜொலித்த 3 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு!!

26 October 2020, 11:10 pm
Quick Share

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி துபாயில் இருந்தே ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ இன்று அறிவித்துள்ளது.

காயம் காரணமாக தவித்து வரும் ரோஹித் சர்மாவின் பெயர் ஆஸ்திரேலியா அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. ரோஹித் சர்மா இல்லாததால் அவரது துணை கேப்டன் பதவி கே.எல் ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், ஐபிஎல் தொடரில் மிக அருமையாக விளையாடிய சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே, மாயன்க் அகர்வால் போன்ற இளம் பேட்ஸ்மேன்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர வழக்கம் போல் ஷிகர் தவான், கோஹ்லி, ஹர்திக் பாண்டியா, சாஹல், ஜடேஜா, குல்தீப் யாதவ் போன்ற அனைத்து சீனியர் வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில், முகமது ஷமி, உமேஷ் யாதவ், சைனி, முகமது சிராஜ் ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் குல்தீப் யாதவ், ஜடேஜா, அஸ்வின் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. விராட் கோலி (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. ஷுப்மான் கில், 4. கேஎல் ராகுல் (துணைக்கேப்டன்), 5. ஷ்ரோயஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ஹர்திக் பாண்ட்யா, 8. மயங்க் அகர்வால், 9. ஜடேஜா, 10. சாஹல், 11. குல்தீப் யாதவ், 12. பும்ரா, 13. முகமது சிராஜ், 14. நவ்தீப் சைனி, 15. ஷர்துல் தாகூர்.

டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர்கள் விவரம்:-

  1. விராட் கோலி, 2. மயங்க் அகர்வால், 3. பிரித்வி ஷா, 4. கேஎல் ராகுல், 5. புஜாரா, 6. ரகானே, 7. ஹனுமா விஹாரி, 8. ஷுப்மான் ஹில், 9. சகா, 10. ரிஷப் பண்ட், 11. பும்ரா, 12. முகமது ஷமி, 13. உமேஷ் யாதவ், 14. நவ்தீவ் சைனி, 15. குல்தீப் யாதவ், 16. ஜடேஜா, 17. அஸ்வின், 18. முகமது சிராஜ்.

கூடுதலாக நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பெரேல், டி நடராஜன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.