கிரேன் கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கர்னூல் மாவட்டத்தில் ரெகுமானா கடா பகுதியில் பாலமுரு – ரங்காரெட்டி இடையே பாசன திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. சுமார் 100 அடி ஆழமுள்ள சுரங்கப்பாதையில் கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக இராட்சச கிரேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வழக்கம் போல, நேற்றிரவு கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென கிரேன் கம்பி அறுந்து விழுந்தது. இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கொல்லப்பூர் போலீஸ், விபத்து குறித்து ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் 100 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டு, உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக பூத் முகவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்…
பெயர் சூட்டிய ஆமிர்கான் தமிழின் மிக பிரபலமான நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் “வெண்ணிலா கபடிக் குழு” திரைப்படத்தின்…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து…
இராமராக ரன்பீர் கபூர்? ரன்பீர் கபூர் இராமராகவும் சாய் பல்லவி சீதாவாகவும் நடித்து வரும் திரைப்படம் “இராமாயணா”. பிரம்மாண்ட பொருட்செலவில்…
வேலூர் மாவட்டத்தில் 23 வயது இளம்பெண் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 6 மாதத்திற்கு பின்னர் வேலையை ராஜினாமா…
LGBTQIA அமைப்பினர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 12ஆம் தேதி கோவை வேளாண் பல்கலைக்…
This website uses cookies.