23 ஆண்டுகள் குயின்ஸ்லேண்டை ராஜ்ஜியம் செய்த காங்கிரஸ் கிங்… ..!!! தட்டித்தூக்கிய உயர்நீதிமன்றம் : குவியும் பாராட்டு..!!!

Author: Babu Lakshmanan
8 October 2021, 2:29 pm
queensland - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் குயின்ஸ்லேண்ட் ஆக்கிரமித்திருந்த கோவில் நிலத்தை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே முன்னாள் எம்எல்ஏ ஊர்வசி செல்வராஜுக்கு சொந்தமான குயின்ஸ் லேண்ட் பூங்கா மற்றும் ரிசார்ட் இயங்கி வருகிறது. தற்போது, இதனை அவரது மகனும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏவான ஊர்வசி அம்ர்தராஜ் நிர்வகித்து வருகிறார்.

Godson Wisely Dass on Twitter: "#Srivaikunkam constituency #Congress  candidate Urvasi Amirtharaj, of #DMK alliance, registered his vote at TDTA  school polling station in Maranthalai village near Athoor. #Thoothukudi  #TNElections2021 @VinodhArulappan ...

177 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தப் பூங்காவின் 21 ஏக்கர் நிலம், காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமானதாகும். இந்த கோவில் நிலங்களை ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறது. கடந்த 1998ம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிந்து விட்ட நிலையிலும், கோவில் நிலங்களில் குயின்ஸ் லேண்ட் பூங்காவும், ரிசார்ட்டும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

எனவே, குத்தகை காலம் முடிந்தும் கோவில் நிலத்தை பயன்படுத்தி வருவதற்காக ரூ.2.75 கோடியை இழப்பீடாக செலுத்தும்படி குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் கடந்த 2013ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், இந்த நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹோட்டல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

Video: Twelve riders have a narrow escape as theme park ride snaps a cable  and crashes down

நீண்ட காலமாக நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணையில், 1995ம் ஆண்டு முன்னாள் எம்எல்ஏ ஊர்வசி செல்வராஜுக்கு குத்தகை விட்டதாகவும், கோவில் பெயரில் இருந்த பட்டாவை வருவாய் துறையினர் ரத்து செய்ததால், அதனைப் பயன்படுத்திக் கொண்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் முயற்சிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

highcourt - updatenews360

அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிமன்றம், குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்து 4 வாரங்களுக்கு நிலத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், வருவாய் துறையினருக்கு ரூ.1.08 கோடியும், இரு கோவில்களுக்கு ரூ.9.50 கோடியும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவை பிறப்பித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Views: - 455

0

0