கோவில் கருவறைக்குள் நுழைந்து பூசாரியை கொடூரமாக தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவர் : அதிர்ச்சி வீடியோ

17 October 2020, 3:42 pm
dmk - updatenews360
Quick Share

திருச்சி : திருச்சி மாவட்டம் துறையூரில் கோவில் பூசாரியை, கோவில் கருவறைக்குள் புகுந்து சரமாரியாக தாக்கிய திமுக கவுன்சிலரின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்க உள்ள நேரத்தில் அரசியல் கட்சிகளின், தேர்தல் நடவடிக்கைகளை பற்றிய அப்டேட்டுகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றன. இப்படியிருக்கையில், திமுக கட்சியின் நிர்வாகிகளின் அத்துமீறல் நடவடிக்கைகள் ஒருபுறம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இது அக்கட்சியின் இமேஜை டேமேஜ் செய்து வருகிறது.

இந்த நிலையில், திருச்சி அருகே கோவிலுக்குள் நுழைந்து, பூஜை செய்து கொண்டிருந்த பூசாரியை திமுக கவுன்சிலர் சரமாரிய தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணூரில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவில் பூசாரி ஓம்பிரகாஷ் நேற்று பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, பக்தர்களுக்கு நடுவே நுழைந்து வந்த கோவிலின் அறங்காவல் குழுத் தலைவரான காசிராஜன் மகனும், திமுக கவுன்சிலர் பேபி என்பவரின் கணவருமான லெனின், கருவறைக்குள் நுழைந்து பூசாரியை கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

கோவில் பணி முறைமாற்று பிரச்சனையில் ஏற்கனவே லெனினும், ஓம்பிரகாஷும் கோவிலை பூட்டு போட்டு மூடியிருந்ததாகவும், ஆனால், அதனை மீறி கோவிலை திறந்து பூஜை செய்து கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மக்களின் வழிபாட்டுக்காக கோவில் திறக்கப்பட்ட நிலையில், பூசாரியை கருவறைக்கு சென்று தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவருக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், கோவில் நிர்வாகத்தினரின் குடும்பத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா..?? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கனவே, சிக்கனில் எலும்பு ஏன் இல்லை என்று பிரியாணிக் கடைக்காரரை திமுக நிர்வாகி தாக்கிய சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மற்றுமொரு சம்பவம் அக்கட்சியினரை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தேர்தல் வருவதற்குள், கட்சிக்கு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் பெயரையும் கெடுத்து விடுவார்களோ என்ற பீதியிலேயே திமுக மூத்த தலைவர்களின் ஒவ்வொரு காலையும் விடிகின்றது போல்!!

Leave a Reply