தென்காசியின் வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. வுக்கு கொரோனா தொற்று உறுதி

6 August 2020, 6:26 pm
Corona mla - updatenews360
Quick Share

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியின் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அதேவேளையில், நோய் தொற்றில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த நோய் தொற்றுக்கு அகப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியின் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. பவுன்ராஜ், எம்.பி.க்கள் செல்வராசு, கார்த்தி சிதம்பரம் சே. ராமலிங்கம் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.