குழந்தை பிறப்பு குறைவது கவலையா இருக்கு;ஏ ஐ தான் எல்லாத்துக்கும் காரணம்:அதிர வைத்த எலான் மஸ்க்…!!
Author: Sudha4 August 2024, 3:23 pm
தொழில் நுட்ப வளர்ச்சி தற்போது அபரிமிதமாக உள்ளது.பெற்றோர்கள் உங்கள் குழந்தைகள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தாதவாறு அவர்களுக்கு வழி காட்டுங்கள் என டெஸ்லா மற்றும் எக்ஸ் சமூகவலைதள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.மேலும் தொழில் நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ளச் செய்கிறது எனவும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது அது, அதிக பொய் சொல்லும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளப்பதிவில் ஏ.ஐ ., தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது, அது அதிகப்படியான பொய் சொல்லும். இது நாளடைவில் பெரியதாக மாறும். ஏ.ஐ., தொழில்நுட்பம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால் பேரிழப்பை ஏற்படுத்தும்.
அமெரிக்காவில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறைந்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. குழந்தை பிறப்பு குறைவதே நாகரிக வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது என்பது கடந்த கால வரலாறு. அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
0
0