திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா: நேரடி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை..!!

Author: Aarthi Sivakumar
18 January 2022, 8:58 am
Quick Share

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடைபெறுகிறது. நேரடி பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகை முதல் தைப்பூசமான இன்று வரை பக்தர்கள் கூட்டம் கோவில்களில் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. 5 நாட்கள் தடை எதிரொலியாக அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த வியாழக்கிழமை வரை ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

இந்நிலையில் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூச திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி திருச்செந்தூர் கோவில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து மற்றகால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது.

Views: - 269

0

0