தனியார் பேருந்தில் மின்சாரம் தாக்கி விபத்து : 5 பேர் உடல் கருகி பலி.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

By: Babu
12 January 2021, 1:28 pm
thanjai bus - updatenews360
Quick Share

தஞ்சாவூர் : தஞ்சை அருகே உயர் மின் அழுத்த கம்பியில் தனியார் பேருந்து உரசியதில், பயணிகள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வரையில் கனநாதன் என்னும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, செல்லும் வழித்தடத்தில் இன்று சென்று கொண்டிருக்கும் போது, கண்டியூர் அருகே சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியில் பேருந்தின் பாகம் உரசியுள்ளது.

இதனால், மின் அழுத்த கம்பியில் இருந்து பேருந்திற்கு மின்சாரம் பாய்ந்ததில், அதில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள், கூட்டமாக குவிந்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

பேருந்தில் மின்சாரம் பாய்ந்து பயணிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 120

0

0