இப்பவாது மாணவியின் குடும்பத்தை சந்திப்பாரா முதலமைச்சர் ஸ்டாலின்… அண்ணாமலை கேள்வி

Author: Babu Lakshmanan
14 February 2022, 2:48 pm
annamalai - stalin - updatenews360
Quick Share

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டானுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சையில் கிறிஸ்துவ விடுதியில் தங்கிப்படித்த மாணவி மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உயிரிழப்பிற்கு முன்னதாக, அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மகளின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை கவுரவப் பிரச்சனையாக தமிழக அரசு கருத வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது, ஒரு வழக்கை சிபிஐக்கு மாற்றும் அதிகாரத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ள தவறியுள்ளதாக தமிழக அரசு வாதம் செய்தது.

ஆனால், அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐதான் விசாரிக்கும் என திட்டவட்டமாக கூறியது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மதமாற்றத்தால் உயிரிழந்த லாவண்யாவின் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பாஜக எப்போதும் நியாயத்தின் பக்கம் உள்ளது. திமுக அரசு பொய்பிரசாரம் மேற்கொண்டதிற்கு மன்னிப்பு கேட்குமா? . இனிமேல் ஆவது உயிரிழந்த மாணவியின் பெற்றோரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பாரா..?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

Views: - 898

0

0