திமுகவுக்கு எதிராக களமிறங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்… உட்கட்சி பூசலால் வெடித்த போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2023, 10:58 am
Communist - Updatenews360
Quick Share

மதுரை மாநகராட்சியில் வைக்கப்படும் கல்வெட்டுகளில் தனது பெயர் விடுபடுகிறது. அந்த கல்வெட்டுகளை மாற்றி எனது பெயர் வைக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பி இருப்பது திமுக கூட்டணிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி துணை மேயர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை மாநகராட்சி 5வது மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின விழா அன்று வைக்கப்பட்ட கல்வெட்டில் எனது பெயர் விடுப்பட்டதை தங்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினேன். பலமுறை நேரிலும் தங்களிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தொடர்ந்து வலியுறுத்தினேன். எனது பெயர் சேர்க்கப்பட்ட கல்வெட்டு எனது முயற்சியின் மூலம் புதிதாக தயார் செய்ய முயற்சித்தேன். அதை வைக்க விடாமல் சிலர் தடுத்தனர்.

இதைத்தொடர்ந்து 29வது வார்டில் நடைபெற்ற அங்கன்வாடி மையம் திறப்பு விழாவில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டிலும் எனது பெயர் மட்டும் இடம்பெறாமல் மேயர் ஆணையாளர், மண்டலத்தலைவர் மற்றும் கவுன்சிலர் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. அதனால், ஏதோ திட்டமிட்டு எனது பெயர் வைக்கப்படாமல் உள்ளதாக தெரிகிறது. ஒரிரு நாளில் இந்த இரண்டு கல்வெட்டுகளையும் மாற்றி எனது பெயர் சேர்க்கப்பட்ட கல்வெட்டினை வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிட்டால் வரும் 21ம் தேதி அன்று 5வது மண்டலத்தில் நடக்க உள்ள மக்கள் குறைதீர் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்னலையில் நான் போராட்டத்தில் ஈடுபடுவேன்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 36

0

0