மத மோதலாக மாறிய கிரிக்கெட் விளையாட்டு.. பந்து பக்கத்வீட்டு பெண் மீது விழுந்ததால் விபரீதம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2024, 10:24 am
Cricket
Quick Share

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி கோட்டாவில் உள்ள வீதி ஒன்றில் நேற்று மாலை சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு சிறுவன் பேட்டிங் செய்த பந்து அந்த வீதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று விழுந்து அங்கிருந்த பெண்ணுக்கு சிறு காயம் ஏற்பட்டது.

இது பற்றி அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனால் கோபமடைந்த கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் தரப்பினர் எங்கள் மீது காவல் நிலையத்தில் புகாரா என்று கூட்டமாக சென்று போலீசில் புகார் அளித்த பெண்ணை தாக்கம் முயன்றனர்.

புகார் அளித்த பெண் இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்கும் நிலையில் கூட்டமாக சென்று அவரை தாக்க முயன்றவர்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர்.

இந்த விவகாரம் மத ரீதியான மோதலாக மாறி இரு பிரிவினரும் கட்டைகள், கற்கள் ஆகியவற்றால் நேற்று இரவு கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

மோதலில் இரண்டு தரப்பினரும் படுகாயம் அடைந்த நிலையில் அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

வன்முறை ஏற்படாமல் தடுக்க வி கோட்டா நகரில் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • Instagram ஓட்டலில் அறை எடுத்து 20 நாட்களாக சிறுமியை சீரழித்த இளைஞர் : இன்ஸ்டாகிராம் நண்பனால் வந்த வினை!!
  • Views: - 136

    0

    0