இளம்பெண் செல்போனுக்கு வந்த நிர்வாண போட்டோ : சிக்கிய போலி சாமியார்.. வெளிச்சத்திற்கு வந்த லீலைகள்!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2022, 10:00 pm
Fake Priest - Updatenews360
Quick Share

அரூர் அருகே இளம்பெண் செல்போனுக்கு நிர்வாண படம் அனுப்பிய போலி சாமியாரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளுவபுரத்தை சேர்ந்த மனோகரன் வீட்டிற்கு கடந்த, 19-ம் தேதி வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னதுரை வந்துள்ளார்.

இவர் தன்னை சாமியார் என அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களது வீட்டின் பின்புறம் செய்வினை செய்து வைத்துள்ளனர். இதனால் உங்க குடும்பத்திற்கு ஆபத்து வரும் என கூறியுள்ளார்.

மேலும் அதனை பூஜை செய்து எடுத்து விடலாம் என கூறியுள்ளார். இதனை நம்பிய மனோகரன் பூஜை செய்ய ஒப்புக் கொண்டு பூஜை பொருட்கள் வாங்க சின்னதுரையை இருசக்கர வாகனத்தில் அரூருக்கு அழைத்துக் சென்றுள்ளார்.

அப்பொழுது மனோகரன் காவல் துறையிடம் தன்னை பிடித்து கொடுத்து விடுவார் என்ற பயத்தில் சின்னதுரை இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மனோகரன் தப்பி ஓடிய சின்னதுரையை செல்போனில் தொடர்பு கொண்டு ஏன்? பூஜை செய்யாமல் சென்று விட்டீர்கள் என கேட்டுள்ளார்.

அப்போது, சின்னதுரை மனோகரனை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் போலி சாமியார் என தெரிந்து கொண்ட மனோகரன் வீடு திரும்பினார்.

அதன் பிறகு சிறிது நேரத்தில் மனோகரனின் மகள் செல்போனுக்கு ஒரு பெண்ணின் நிர்வாண படத்தை சின்னதுரை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனோகரன் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலி சாமியார் சின்னதுரை மீது புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் சின்னதுரையை நேற்று இரவு கைது செய்தனர். மேலும் முன்பின் தெரியாதவர்கள் வந்தால் பேச்சுக் கொடுக்க வேண்டாம் செல்போன் நம்பர் கொடுக்க வேண்டாம்.

பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். புதிய நபர்கள் சந்தேகப்படும் படி இருந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Views: - 643

0

0