தமிழக காங்கிரஸ் பிரமுகருக்கு வீடியோ காலில் நிர்வாணமாக வந்த பெண்… செல்போனை ஹேக் செய்து மிரட்டிய கும்பல்!!!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவராக இருப்பவர் மோகன் குமாரமங்கலம். இவர் பெங்களூரு பழைய விமானநிலைய சாலை கொடிஹள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 11ம் தேதி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் மோகன் குமாரமங்கலம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், முந்தைய நாள் தனது செல்போனின் வாட்ஸ்அப் வீடியோ கால் வந்தது. யார் அழைக்கிறார் என பார்க்க எடுத்தபோது, அது ஆட்டோமெடிக்காக ஆன் ஆகியது.
அடுத்த சில நொடிகளில் ஒரு பெண் நிர்வாணமாக வீடியோ காலில் தோன்றினார். உடனே நான் போனை ஆப் செய்துவிட்டேன். அதன்பின், எனது மொபைலில் சமூக வலைதள கணக்கில் இருக்கும் புகைப்படங்களை மர்மநபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
மேலும் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். எனவே எனது போனை ஹேக் செய்து, மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து புகாரின் பேரில் விசாரணை செய்த பெங்களூரு சைபர் கிரைம் போலீசார், முதற்கட்ட விசாரணையில், காங்கிரஸ் செயல்தலைவர் மோகன்குமாரமங்கலத்தின் செல்போனை ஹேக் செய்த நபர் ஜார்கண்டடை சேர்ந்த கும்பல் என தெரியவந்துள்ளது.
அந்த கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.