காதலை ஏற்க மறுத்த பெண்ணை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வாலிபர்

By: Udayaraman
19 June 2021, 8:03 pm
Quick Share

ஆந்திர: சித்தூர் விரும்பிய பெண் காதலை ஏற்க மறுத்த காரணத்தால் நாட்டு துப்பாக்கியால் சுட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பைரெட்டிபள்ளி மண்டலத்தை சேர்ந்த கிராமம் கடப்பா நத்தம். அந்த கிராமத்தை சேர்ந்த வாலிபர் சந்த்பாஷா தன்னுடைய வீட்டின் அருகே வசித்து வரும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். தன்னுடைய காதலை அவர் பலமுறை எடுத்துக் கூறியும் அந்த பெண் ஏற்கவில்லை. மேலும் இது தொடர்பாக அந்த பெண் தன்னுடைய தாயிடம் கூறவே அவர் சந்த்பாஷாவை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இதனால் ஆவேசம் அடைந்த சந்தபாஷா இன்று திடீரென்று தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியுடன் வீட்டிலிருந்து வெளியே வந்து சத்தம் போட்டு கொண்டிருந்தார். இதனை பார்த்த அந்த இளம் பெண்ணின் குடும்பத்தார் அஞ்சி நடுங்கினர். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணின் வீட்டின் கதவு மீது அவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டார்.எனவே அந்த பெண்ணின் தாயார் தொலைபேசி மூலம் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் சந்த்பாஷாவை கைது செய்து நாட்டு துப்பாக்கியை கைபற்றிய பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 139

0

0