ஓடிடியில் வெளியான படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்வதா..? தியேட்டர் உரிமையாளர்களின் முடிவால் அதிர்ந்த போன தயாரிப்பாளர்கள்..!!

Author: Babu Lakshmanan
2 September 2021, 11:14 am
Quick Share

ஓடிடியில் வெளியிடப்பட்ட படங்களை திரையரங்குகளில் வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, திரையரங்குகள் மூடப்பட்டன. மேலும், திரைப்பட சூட்டிங்கிற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்த பிறகு, படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டே இருந்தன.

இதனால், மொத்த திரையுலகமும் ஓடிடி பக்கம் திரும்பின. படங்கள் சரியான காலகட்டத்தில் வெளியாகவும், ரசிகர்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே பார்ப்பதற்கும் ஓடிடி தளங்கள் பெரிதும் உதவின.

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், ஓடிடியில் வெளியான படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஓடிடியில் வெளியிடப்பட்ட படங்களை திரையரங்குகளில் வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியிட சம்மதிக்கும் படங்களை மட்டுமே திரையரங்குகளில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் ஓடிடி தளங்களுடன் படங்களை வெளியிட ஒப்பந்தம் போட்டுள்ளதால், திரையரங்குகளில் படங்களை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Views: - 304

0

0