50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இன்று முதல் திறப்பு : ஆந்திரா – கர்நாடகா பேருந்துகள் வந்து செல்ல அனுமதி..!!
Author: Babu Lakshmanan23 August 2021, 9:09 am
தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இன்று முதல் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் சில கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, சுழற்சி முறையில் வரும் செப்.,1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று முதல் 50% பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மதுக்கூடங்கள் செயல்பட இன்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகளின் விபரம் பின்வருமாறு
• இன்று முதல் 50% பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் இயங்க அனுமதி
• வரும் செப்.,1-ஆம் தேதி முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதி
• டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து பட்டய படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த தமிழக அரசு அனுமதி
• தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சிகளுக்கு அனுமதி
• தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மதுக்கூடங்கள் இன்று முதல் செயல்பட அனுமதி
• கடற்கரையில் பொதுமக்கள் இன்று முதல் அனுமதி – கடற்கரையில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள், சிறு வியாபாரிகள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்
• தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் செயல்பட அனுமதி
• நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் இன்று முதல் செயல்பட அனுமதி
• மழலையர் காப்பகங்கள் (Creche) இன்று முதல் செயல்பட அனுமதி
• அங்கன்வாடி மையங்கள் செப்.,1 முதல் மதிய உணவு வழங்க அனுமதி
• ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்துக்கு இன்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
0
0