உங்களுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய சொகுசு பங்களா.. துரைமுருகனை ‘நோஸ் கட்’ செய்த திருடர்கள்..!!!

15 April 2021, 12:50 pm
Duraimurugan - Updatenews360
Quick Share

திமுகவின் பொதுச்செயலாளராக இருந்து வருபவர் துரைமுருகன். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு திருப்பத்தூரின் ஏலகிரி மலை மஞ்சகொல்லையில் 25 ஏக்கர் அளவிலான தோட்டத்துடன் சொகுசு பங்களாவும் உள்ளது.

கடந்த 8ம் தேதி கொரோனா தொற்றால் துரைமுருகன் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த சமயத்தில் கடந்த 12ம் தேதி மஞ்சகொல்லையில் உள்ள அவரது சொகுசு பங்களாவின் வீட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கு வீட்டின் பீரோக்களை உடைத்து ஏதேனும் விலையுயர்ந்த பொருட்கள் சிக்குமா..? எனத் தேடியுள்ளனர். ஆனால், எதுவும் கிடைக்காததால், சிசிடிவியின் ஹார்டு டிஸ்க்குகளையும் எடுத்துச் சென்று விட்டனர்.

Duraimurugan - updatenews360

இது குறித்து அறிந்த துரைமுருகன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஏலகிரிமலை போலீசார் சொகுசு பங்களாவிற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பங்களா சுவற்றில், ஒரு 100 ரூபாய் கூட வைக்க மாட்டியா..? என எழுதி வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும், பார்வையாளர்கள் வருகை பதிவேட்டில் “ஒரு ரூபாய் கூட இல்ல, எடுக்கல. 100 ரூபாய் கூட வைக்கலேன்னா, இவ்வளவு பெரிய பங்களா எதற்கு.?’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், திருட வந்த இடத்தில் பொழு போக்கிற்காக ரம்மி விளையாடி விட்டு, சீட்டு கட்டுக்களையும் அங்கேயே போட்டு விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியிருந்தது. அதில், 10 பேர் இரு கார்களில் வந்து சென்றது தெரிய வந்தது.

இதேபோல, வாணியம்பாடி அருகே உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான பங்களாவிலும் திருடர்கள், இதுபோன்று எழுதிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பெரிய பங்களாவை பார்த்து இன்னைக்கு செம வேட்டை இருக்கிறது என்று நம்பி உள்ளே புகுந்த திருடர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனால், அதிருப்தியடைந்த அவர்கள், போகும் போது வீட்டின் உரிமையாளரை கலாய்த்து சென்றிருப்பது அப்பகுதி மக்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 72

0

0