ஆன்லைன் ரம்மியில் மட்டுமல்ல பல சூதாட்டம் இருக்கு.. தடுத்து நிறுத்தினால் விளையாடாம இருப்பாங்களா? நடிகர் சரத்குமார் கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2023, 10:44 am
Sarathkumar - Updatenews360
Quick Share

நாகர்கோவிலில் நடைபெறும் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும் நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள பொன்னியன் செல்வன் 2-ம் பாகம் திரைப்படத்தினை ரசிகர்கள் எந்த அளவிற்கு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றாகளோ அந்த அளவிற்கு நானும் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கின்றேன் என்றார்.

மேலும் சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் இன மக்களை திரையரங்கு உள்ளே சென்று திரைப்படம் பார்க்க அனுமதிக்காத விவகாரம் வருத்தம் அளிக்கிறது.

இந்த மாதிரியான காலகட்டத்தில் இதுபோல் நடந்தது மிகவும் வேதனையாக இருக்கின்றது. எல்லோருக்கும் சம உரிமை உண்டு எனவே இந்த விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கின்றது என்று சொல்பவர்கள் எதிர்கட்சியினர் விவாதமாக இருக்கும் எனவே சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கின்றதா என்று அரசுக்கு தெரியும்.

தமிழகத்தை பொறுத்தவரை காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக என்றைக்கும் நான் சொல்வேன் அதைபோல்
இந்தியாவிலேயே தமிழகத்தில் போலீசாரின் பணி மிகச்சிறந்தது என சொல்வேன் என்றார்.

மேலும் அதிமுக கட்சி பிரச்சனை எனபது அவர்களுடைய உட்கட்சி பிரச்சினை ஆகும் எனவே அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்ற அவர், ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் என்பது நிச்சயமாக சட்டமாக்கப்பட்டு தடைசெய்ய வேண்டும்.

ஆன்லைன் ரம்மி மட்டுமின்றி கிரிக்கெட் உட்பட ஏராளமான விளையாட்டுகளில் சூதாட்டம் என்பது நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது.

ஆன்லைன் ரம்மி மட்டுமின்றி ஆன்லைன் விளையாட்டுகள் அனைத்திலும் சூதாட்டம் இருக்கின்றது. இந்தியாவில் தடுத்தாலும் வெளிநாட்டில் சென்று சூதாட கூடிய நிலைதான் உள்ளது என்று
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்தார்.

Views: - 122

0

1