விதிமீறல்களை வெளிச்சம் போட்டு காட்டியும் நடவடிக்கை இல்லை.. அதிசயமான தேர்தல் : இபிஎஸ் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2023, 9:47 pm
Edappadi - Updatenews360
Quick Share

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இன்று காலை முதலே முன்னிலை வகித்துவந்த, தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது அவர் பேசும் போது, ஈரோடு சட்டமன்றத் தேர்தல் இடைத்தேர்தல் கழக வேட்பாளர் தென்னரசு அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு ஆதிமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

பல்வேறு தொண்டர்கள் சட்டமன்ற தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகள் தொண்டர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

திரிபுரா நாகலாந்து மாநிலத்தில் பிஜேபி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் ஜனநாயகமா பணநாயகமா பார்க்கிறபோது பணநாயகம் தான் இன்றைய தினம் வெற்றி பெற்றுள்ளது

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் நாள் முதல் தேர்தல் நடக்கும் நாள் முதல் வாக்காளர்களுக்கு தினம்தோறும் திமுகவினர் பண மழை பொழிந்து வந்தனர் திராவிட முன்னேற்ற அமைச்சர்கள் 22 மாதத்தில் சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டு தேர்தலில் தண்ணீர் போல பணத்தை வாரி இளைத்து ஜனநாயக படுகொலை செய்து தேர்தல் கூட்டணி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து வாக்காளர்களை 120 இடங்களில் டென்ட் போட்டு சாமியான பந்தல் போட்டு ஆடுகளை பட்டியலாக அடைத்து வாக்காளர்களை அடைத்து வைத்து அவர்களுக்கு அசைவ உணவு கொடுத்து தினம் தோறும் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து பல்வேறு பரிசு பொருட்கள் வெள்ளி கொலுசு ஹார்ட் பேக் வாட்ச் குக்கர் போன்ற பரிசு பொருட்களை வழங்கியும் வாக்காளர்கள் வீட்டிற்கு கோழிக்கறி கொடுத்தும் தேர்தல் முடிவுக்கு பிறகு 5000 ரூபாய் பெறுமானம் உள்ள மளிகை சாமான்கள் கொடுப்பதாக டோக்கன் கொடுத்து ஏமாற்றி உள்ளார்கள்.

மத்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் மாநில தேர்தல் ஆணையர் புகார் செய்தோம் செய்தோம் தேர்தல் அதிகாரிகள் திமுக மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆஇஅதிமுக ஆட்சியில் நடந்து முடிந்த நன்மைகளை காட்டி வாக்குகளைக் கேட்டோம் திமுக சம்பாதித்த பணத்தை அமைச்சர்கள் வைத்துக்கொண்டு முதலீடு செய்து இவர்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளார்கள்

பல்வேறு இடைத்தேர்தலும் நடைபெற்று உள்ளது இப்படி போன்ற விதிமுறை இதுபோன்று நடந்ததில்லை திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்கள் அதிகாரத்தை திருஷ்பிரயோகம் செய்து முற்றிலும் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுத்தினார்கள்

எனக்கு ஒரு வருத்தம் திமுக இவ்வளவு பெரிய விதிமுறைகளை ஈடுபட்ட போதும் ஊடக நபர்களும் பத்திரிக்கை நண்பர்களும் வெளிச்சம் போட்டு காட்டாதது வருத்தம் அளிக்கிறது

பட்டியலை அடைத்தது போல ஒரு சில ஊடகங்களில் வந்தது பெரும்பாலான ஊடகத்தில் வரவில்லை. தேர்தல் நேரத்தில் நீங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருந்தால் இப்படி போன்ற நிலை வெற்றி பெற்றிருக்க முடியாது.

ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதிகமான அளவில் விதிமுறை மீறல் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றி தோல்வி அனைத்தும் வரும்.
திமுக இதை வைத்து மிகப்பெரிய வெற்றி கொண்டாடுவது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இது தேர்தல் ஆணையத்தின் தோல்வி. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் ஒவ்வொரு வாக்காளருக்கும் தினம்தோறும் அழைத்துச் சென்று விட்டார்கள் வாக்காளர்கள் நாங்கள் பார்க்க முடியவில்லை.

வாக்காளர்களை ஏமாற்றி அபகரித்து இந்த வெற்றியை பெற்றுள்ளார்கள். நாடாளுமன்றத் தேர்தல் தேர்தலுக்கு தேர்தல் மாறுபடும்

பணம் பரிசுப் பொருட்கள் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளார்கள்
அதிமுக பரிசுப் பொருட்கள் கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். தேர்தல் நடக்கும் போதே நான்காயிரம் ரூபாய் கொடுத்தார்கள்.

இன்னொரு புறம் குக்கர் கொடுப்பதாக வாக்காளர்களை அடைத்து வைத்திருந்தார்கள். எங்களது நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தார்கள்.

குக்கர் கொடுத்திருக்கிறார்கள் என பொதுமக்கள் தெரிவித்தார்கள் கை சின்னத்திற்கு ஓட்டு போட கொடுத்தார்கள் என வாக்காளர்கள் தெரிவித்தனர்.

இவ்வளவுபெரிய விதிமீறல் இருந்தும் நடவடிக்கை இல்லை. இது அதிசயமான தேர்தலாக உள்ளது. யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் யார் வேண்டுமானாலும் வரலாம் இதனால் திமுக வெற்றி பெற்றுள்ளது.

ஊடகம் வெளிச்சம் போட்டு காண்பித்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும். 120 கொட்டகைகள் வாக்காளர்களை அடைத்து வைத்ததை ஒரு சில ஊடகங்கள் மட்டுமே காண்பித்தனர்.

இரண்டு ஆண்டு காலம் வருமானம் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி ஏழை மக்களை ஆசை வார்த்தை காட்டி மனமாற்றி வெற்றி பெற்றார்கள்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது இது மோசமான ஜனநாயக படுகொலை ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பேராபத்து என தெரிவித்தார்.

Views: - 262

0

0