‘தமிழக கோயில்களில் முடி காணிக்கைக்கு கட்டணம் இல்லை’: இன்று முதல் அமல்…பக்தர்கள் வரவேற்பு!!

Author: Aarthi Sivakumar
6 September 2021, 12:07 pm
Quick Share

சென்னை: இந்து சமயம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மொட்டை அடிக்க கட்டணம் இல்லை என்ற நடைமுறை இன்றிலிருந்து அமலுக்கு வந்தது

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. அதன்படி கடந்த 4ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் சேகர் பாபு, திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் செய்யும் பொருட்டு முடி காணிக்கைக்கான கட்டணம் இனி வசூலிக்கப்பட மாட்டாது. அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கோயில் நிர்வாகமே அந்த கட்டணத்தை அளிக்கும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் மொட்டை அடிக்க கட்டணம் இல்லை என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. பழனி முருகன் கோவிலில் இலவச டோக்கன் அளிக்கப்பட்டு கட்டணம் இன்றி மொட்டை அடிப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தனியார் ரூபாய் 100 கட்டணம் வசூலிக்கும் நிலையில் தேவஸ்தானம் சார்பில் கட்டணமின்றி இலவசமாக மொட்டை அடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் மொட்டை அடிக்க கட்டணம் இல்லை என்ற நடைமுறைக்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Views: - 151

0

0