காலம்போற்றும் எடப்பாடியாரின் வரலாற்று சாதனை : சுதந்திரத்திற்கு பிறகு உருவான முதல் நீர்த்தேக்கம்!!

22 November 2020, 8:00 am
thervoy kandigai reservior - updatenews360
Quick Share

சென்னை: இந்திய விடுதலைக்குப் பின் சென்னையில் குடிநீர்த் தேவைக்காகக் கட்டப்பட்டுள்ள முதல் நீர்த்தேக்கமாக தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தைக் கட்டி முடித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவால் திறக்கப்படும் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் முக்கால் நூற்றாண்டுக்குப் பின் சென்னையில் குடிநீர்த் தேவைக்காகக் கட்டப்படுவதாகும். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் பெரும்பாலான தொகுதிகளை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், எந்தக்கட்சிக்கு மக்கள் வாக்களித்தார்கள் என்பதையெல்லாம் பார்க்காமல், இந்த நீர்த்தேக்கத்தை கட்டிமுடித்ததால் தலைநகரத்து மக்கள் மிகவும் நெகிழ்ந்துபோயிருக்கிறார்கள்.

தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு முன்பு சென்னையில் குடிநீர்த் தேவைக்காகக் 1944-ஆம் ஆண்டு கொசஸ்தலையாற்றின் மீது பூண்டியில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தியின் பெயர் அதற்கு சூட்டப்பட்டது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் நெருக்கடியான நேரத்தில் இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. அந்த நீர்த்தேக்கத்தை சென்னை ஆளுநர் ஆர்துர் ஹோப் தொடங்கி வைத்தார்.

அதற்குப் பின் சென்னையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி முதல்முறை முதல்வர் பதவியேற்ற பின், சென்னையில் குடிநீர்த் தேவைக்காக கடலூரில் இருக்கும் வீராணம் ஏரியில் இருந்து நீர் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டார். இந்தத் திட்டத்தில் செயல்பாடுகளில் பெரும் ஊழல் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. பெரிய அளவு அரசுப் பணம் வீணடிக்கப்பட்டதுடன் திட்டமும் முடிக்கப்படவில்லை.

MGR-updatenews360

அதிமுகவைத் தொடங்கி எம்.ஜி.ஆர் முதல்வரான போதும் திமுகவே பெரும்பாலான இடங்களில் வென்றது. ஆனாலும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு சென்னைக்கு கிருஷ்ணா நதியில் இருந்து நீர் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்றி மாநகரத்தின் தாகத்தை ஒரளவு போக்கியது. இதற்குப் பின் ஜெ.ஜெயலலிதா முதல்வரான பின் கருணாதி ஆட்சியால் சரியாக முடிக்கப்படாமல் கைவிடப்பட்ட வீராணம் திட்டத்தை முறையாகத் திட்டமிட்டு, தலைநகரின் குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்த்தார். தொடர்ந்து தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். தமது தலைவியால் தொடங்கப்பட்ட திட்டத்தை எடப்பாடி பழனிசாமி முழுமையாக முடித்திருக்கிறார். சென்னையின் குடிநீர்த் தேவைக்கான அனைத்து திட்டங்களையும் அதிமுக அரசே நிறைவேற்றியுள்ளது.

EPS_UpdateNews360

தற்போது தேர்வாய்கண்டிகையில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கம் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றில் இருந்து வரும் நீரை சேமிக்கும். இதற்காக கண்டலேறு-பூண்டி கால்வாயில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தைக் கட்டுவதற்காக 1,485 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த தேக்கத்தில் ஆயிரம் டி.எம்.சி அளவு நீரைத் தேக்கிவைக்க முடியும். பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுடன் சேர்த்தால் தற்போது சென்னைக்குக் குடிநீர் சேமிக்க ஐந்து நீர்நிலைகள் இருக்கின்றன. இந்த நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பினால் சென்னையின் குடிநீர்த் தேவை நிறைவடையும்.

thervoy kandigai reservior - updatenews360

சென்னையில் பல சட்டமன்றத் தேர்தல்களில் திமுக அதிக இடங்களைப் பெற்றுள்ளபோதிலும் திமுக அரசு சென்னை மக்களின் முக்கிய தேவையான குடிநீர் தருவதற்கு எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றியதில்லை. சென்னை மேயராக தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இருந்தபோதும், எந்த குடிநீர்த் திட்டத்தையும் செயல்படுத்தியதில்லை. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவே சென்னையில் அதிக இடங்களை வென்றது. மேலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் சென்னையில் மூன்று இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆனாலும் சென்னை மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்ற உறுதியுடன் எடப்பாடி பழனிசாமி அரசு, இந்தத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது நகர மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

பெரும்பாலான மக்கள் வாக்களிக்காதபோதே சென்னையின் தேவைகளுக்காக சிறந்த திட்டங்களை நிறைவேற்றும் பழனிசாமி அரசு, அவருக்கு வாக்களித்தால் இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றும் என்ற எண்ணமும் மக்கள் மனங்களில் தோன்றியுள்ளது. தமிழத்தின் தலைநகரில் முதல்வரின் செல்வாக்கையும் அதிகரித்துள்ளது. வரும் தேர்தலில் இது அதிமுகவுக்கு ஆதரவு வாக்குகளாகவும் வெற்றியாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 27

0

0

1 thought on “காலம்போற்றும் எடப்பாடியாரின் வரலாற்று சாதனை : சுதந்திரத்திற்கு பிறகு உருவான முதல் நீர்த்தேக்கம்!!

Comments are closed.