புதிய நாடாளுமன்றம் ரொம்ப பாதுகாப்புனு சொன்னாங்க.. ஆனா அதைவே காப்பாத்த முடியல.. மக்களை எப்படி? பாஜக மீது சீறும் அரசியல் பிரமுகர்!
புதிய நாடாளுமன்றம் ரொம்ப பாதுகாப்புனு சொன்னாங்க.. ஆனா அதைவே காப்பாத்த முடியல.. மக்களை எப்படி? பாஜக மீது சீறும் அரசியல் பிரமுகர்!
மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் 2001 ஆம் ஆண்டு இதே நாளில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி ஒன்றியத்தில் இருந்தபோது நாடாளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது என்றும், 22 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்திற்குள் மக்களவையில் மோடி தலைமையிலான ஆட்சியின் போது இன்று தாக்குதல் நடைபெற்றுள்ளது இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
மக்களவையில் புகை குண்டு வீசியவர்கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட்டு மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும். புகை கொண்டு வீசியவர்களை மக்களவைக்குள் நுழைவதற்கான அனுமதி சீட்டு பரிந்துரையை கர்நாடக மாநில மைசூர் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் பிரதாப் சிம்ஹா என்பவர் வழங்கியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பை மீறி இந்த இருவரும் மக்களவைக்குள் நுழைந்திருப்பது மோடி ஆட்சியில் மக்களின் பாதுகாப்பை கேள்வி குறி ஆக்கியுள்ளது என்று தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் மிகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் ஒன்றிய அரசின் சார்பாக விளம்பரம் செய்யப்பட்டது.
இத்தகைய அறிவிப்பெல்லாம் வெறும் வாய்சவடால்கள் என்பதை இன்றைய பயங்கர சம்பவம் எடுத்துக்காட்டி உள்ளது. நீட் தேர்வு எழுத போன மாணவர்களை பயங்கரவாதிகளை போல் பரிசோதிக்கும் போது புகை குண்டுகளை எடுத்து வந்த விஷமிகளை எப்படி அனுமதித்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.