பீகாரில் இன்று 3ம் கட்ட தேர்தல்: பாதுகாப்பாக வாக்களிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்…!!

7 November 2020, 9:32 am
bihar election - updatenews360
Quick Share

பீகாரில் 78 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பீகார் மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 3ம் தேதியும் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

PM_Modi_UpdateNews360

காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

இன்று நடைபெறும் ஜனநாயக திருவிழாவில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் பங்கேற்று வாக்களிக்க வேண்டும். இருப்பினும், முக கவசங்களை அணிந்துகொள்வதும் சமூக இடைவெளியை பராமரிப்பதும் அவசியம் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Views: - 33

0

0